கும்பகோணத்தில் பைனான்சியரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பாணாதுறை பத்துக்கட்டு தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவர் பணம் கொடுக்கல், வாங்கல் தொழில் செய்து வருகிறார்.
நேற்றிரவு தனது வீட்டிற்கு அருகில் உள்ள மருத்துவர் மூர்த்தி சாலையில் செல்போனில் பேசிக் கொண்டிருந்த பொழுது, மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் மற்றும் முகக்கவசம் அணிந்து வந்த 3 பேர் மணிகண்டனை வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
படுகாயம் அடைந்த மணிகண்டன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.