சென்னையில் 200ஆவது ஆண்டை கொண்டாடும் எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் சுமார் 66 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
எழும்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு 195 கோடி ரூபாய் மதிப்பிலான சிகிச்சைக்கான நவீன கருவிகள் உள்ளிட்ட சேவைகளையும் அவர் தொடங்கி வைத்தார்.
இதனிடையே, பணியின் போது உயிரிழந்த காவலர்களின் வாரிசுகள் 912 பேருக்கு கருணை அடிப்படையில் காவல்நிலைய வரவேற்பாளர் பணிக்கான நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.