சேலம் மாநகராட்சி ஆணையர் தன்னை எதிர்கட்சி எம்.பி. என நினைக்கிறார் என்று தி.மு.க. எம்.பி. பார்த்திபன் நேற்று டிவிட்டரில் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், இன்று ஆணையருக்கு அவர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
மாநகராட்சியில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில், தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக பார்த்திபன் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மாநகராட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதை வரவேற்பதாகவும், ஆணையர் சிறப்பாக செயல்பட கூடியவர் என்றும் இன்று குறிப்பிட்டுள்ளார். நேற்று அவர் டிவிட்டரில் பதிவிட்டிருந்த தகவல்களும் நீக்கப்பட்டுள்ளன.