கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் இன்று தலைமை செயலாகத்தில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்தனர்.
அப்போது மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்த முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் , சட்டப்படி நியாமான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்று உறுதி அளித்தார்.
இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள் எ.வ.வேலு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.