திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் ஃபரிதா குழுமத்துக்கு சொந்தமான தோல் மற்றும் காலணி தொழிற்சாலைகளில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரி சோதனை நிறைவடைந்தது.
95 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சோதனையின் போது கடந்த 10 ஆண்டுகளில் பரிதா குழுமம் மேற்கொண்ட பண பரிவர்த்தனை குறித்த ஆவணங்கள், ஊழியர்களுக்கு வழங்கிய சம்பள கணக்கு, ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் கணக்கு வழக்குகளை அதிகாரிகள் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.
சோதனையின் முடிவில் ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் சில ஆவணங்களை அதிகாரிகள் விசாரணைக்காக கைப்பற்றி எடுத்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.