தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 22 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று டெல்டா மாவட்டங்கள், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் நாளை 21 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
வரும் 29 மற்றும் 30ம் தேதிகளில் 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை மையம், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.
மேலும் குமரிக்கடல், தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது.