இந்தியாவிலேயே முதன்முறையாக 47 வயது நபரின் குரல் வளையில் இருந்த கேன்சர் கட்டியை ரோபோடிக் அறுவை சிகிக்கை மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
திருவண்ணாமலையை சேர்ந்த 47 வயது நபருக்கு 2 மாதங்களுக்கு முன் தொண்டையில் இருந்த கேன்சர் கட்டி ரேடியேசன் மூலம் கரைக்கப்பட்டது. ஆனால் மீண்டும் கேன்சர் கட்டி உருவானதால், குரல்வளையுடன் கேன்சர் கட்டியை அகற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
2 மருத்துவக்குழுக்கள் வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சையை செய்து முடித்துள்ளன. நோயாளி மூச்சு விடுவதை தொண்டை வழியாகத்தான் மேற்கொள்ள முடியும் என்பதால் தொண்டை பகுதியில் சிறிய துளையிட்டு, அது ஒரு சிறிய பட்டன் வடிவில் மூடி வைக்கப்பட்டுள்ளது.