போலி ஹால்மார்க் நகைகள் விற்கப்படுவதை தடுக்க, நகை வாங்குபவரின் பெயர், ஹால்மார்க் எண் மற்றும் தேதி, நகையின் விபரம் ஆகியவற்றை ஹால்மார்க் இணையதளத்தில் பதிவிடும் கோரிக்கையை பரிசீலிக்குமாறு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தவிட்டுள்ளது.
போலி ஹால்மார்க் நகைகள் விற்கப்படுவதால் ஹால்மார்க் மையங்கள் பாதிக்கப்படுவதாக தேனியை சேர்ந்த ஒரு ஹால்மார்க் மையம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, மனுதாரரின் கோரிக்கை குறித்து பரிசீலிக்குமாறு இந்திய தரநிர்ணய ஆணையத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.