அத்திக்கடவு - அவினாசி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் இன்னும் சில மாதங்களில் நிறைவடையும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஈரோடு பெருந்துறையில் 167 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர், 184 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் பேசிய அவர், 10 கோடி ரூபாய் செலவில் ஈரோட்டில் மஞ்சள் ஏற்றுமதி மையம் தரம் உயர்த்தப்படும் என்றும், 3 இடங்களில் குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.