கோயம்புத்தூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடமானம் வைத்து 40 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பெண் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
குனியமுத்தூரில் செயல்பட்டு வரும் அந்நிறுவனத்தின் மேலாளர் போலீசில் அளித்த புகாரில், தங்களது நிறுவனத்தின் தணிக்கையில் 600 கிராம் போலி நகைகள் இருப்பதை கண்டுபிடித்ததாகவும், மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
விசாரணையில், வாடிக்கையாளர்களின் பெயரில் போலி நகைகளை வைத்து 40 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்தின் முன்னாள் உதவி மேலாளர் சத்யா, கிளை பெண் அதிகாரி கார்த்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.