குன்றத்தூர் அருகே 10 மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டவரின் உடல், எலும்புக்கூடாக மீட்கப்பட்டது.
எருமையூர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மீது குன்றத்தூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் முதல் பிரகாஷ் மாயமானதால், அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர்.
பிரகாசின் எதிராளியான கருப்பு மற்றும் அவரது கூட்டாளிகள் அவரை கடத்திச் சென்று கொலை செய்து திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் வீசியது விசாரணையில் தெரியவந்தது. கிணற்றில் சாக்கு மூட்டையில் எலும்புக் கூட இருந்த பிரகாஷின் உடலை மீட்டனர்.
தொடர்ந்து, அங்கேயே பிரேத பரிசோதனை செய்து, உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.