சேலம் மாவட்டம் பசவக்கல் பேருந்து நிறுத்தம் அருகே சாலையின் குறுக்கே நாய் வந்ததால், அரசுப் பேருந்து ஓட்டுநர் திடீரென்று பிரேக் அடித்ததில், முன்பக்க படிக்கட்டில் நின்றிருந்த நடத்துநர் கீழே விழுந்து உயிரிழந்தார்.
சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து செட்டிசாவடி நோக்கி சென்ற நகர பேருந்தில் இந்த விபத்து நடந்துள்ளது.
படுகாயமடைந்த நடத்துநர் ராஜேந்திரன், அரசு மோகன் குமார மங்கலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.