திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை சோதனைச் சாவடியில் உரிய ஆவணமின்றி சொகுசு பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட 39 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
ஆந்திராவில் இருந்து வந்த பேருந்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது, விக்ரம் சிங் என்ற பயணி அட்டைப்பெட்டில் மறைத்து பணத்தை கொண்டு வந்தது தெரியவந்தது.
விசாரணையில், தான் செல்போன் உதிரி பாகம் விற்கும் கடை நடத்தி வருவதாகவும், நண்பர்களிடம் கடன் பெற்று சென்னையில் செல்போன் உதிரி பாகம் வாங்க பணத்தை கொண்டு செல்வதாகவும் விக்ரம் சிங் தெரிவித்துள்ளார்.