குடியாத்தத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் மூலம் 97 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் வேலூர் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளையில், மகளிர் சுய உதவிகுழுக்களின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட கிளை மேலாளர் உமா மகேஸ்வரி கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார்.
பின்னர், ஜாமினில் வெளிவந்த அவரை தற்போது பணிநீக்கம் செய்து வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு பொது மேலாளர் உத்தரவிட்டார்.