கோபிசெட்டிப்பாளையம் அருகே குடும்பத் தகராறில் இரு மகள்களுடன் வாய்க்காலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய் உயிரிழந்த நிலையில், ஒரு மகள் உயிருடன் மீட்கப்பட்டார். 13 ஆண்டுகளுக்கு முன் திருமணமான கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்த தீபக் - விஜயலட்சுமி தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.
பெங்களூருவில் ஐ.டி கம்பெனியில் வேலை செய்து வந்த தீபக் 2 ஆண்டுகளாக வீட்டிலிருந்து பணிபுரியும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தீபக் நள்ளிரவில் கண்விழித்து பார்த்த போது மனைவி, மகள் காணாமல் போனதை அறிந்து அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார்.
அப்போது கீழ்பவானி வாய்க்கால் அருகே தங்களது இருசக்கர வாகனம் நின்றிருந்ததை அறிந்து அங்கு தேடிய போது, 7 கிலோ மீட்டர் தூரத்தில் வாய்க்காலில் விஜயலட்சுமி சடலமாக மீட்கப்பட்டார்.
4 கிலோ மீட்டர் தொலைவில் கரையோரம் உள்ள மரத்தை பிடித்துக் கொண்டிருந்த முத்த மகளை மீட்ட தீயணைப்புத்துறையினர், இளைய மகளை தேடி வருகின்றனர்.