தூத்துக்குடியில், முன்விரோதம் காரணமாக கூலித்தொழிலாளியை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த 2 சிறுவர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெயிண்டராக வேலை செய்து வந்த சரவண குமார் என்பவர் தனது தம்பியையும் மச்சானையும் பேருந்து ஏற்றி விடுவதற்காக நேற்றிரவு புதிய பேருந்து நிலையம் அருகே பைக்கில் வந்துள்ளார்.
சரவணகுமாரை வழிமறித்த 5 பேர் கும்பல் அரிவாளால் தாக்கத் தொடங்கியதும் உடனிருந்த தம்பியும், மச்சானும் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்த நிலையில், அந்த கும்பல் சரவண குமாரை நடுரோட்டில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளது. இது தொடர்பாக மனோ, துரைசாமி, கார்த்திக் ஆகிய இளைஞர்களையும் 2 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், சரவணகுமாரின் நண்பரான ராஜமணிக்கும் மனோவுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததும், தன்னை கொலை செய்ய இருவரும் திட்டம் தீட்டியதை அறிந்த மனோ,சரவணகுமாரை நண்பர்களுடன் இணைந்து கொலை செய்ததும் தெரியவந்தது.