செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ரூ.5 கோடி கடனுக்காக கடத்தப்பட்ட தொழிலதிபர்.. 2 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்..!

Aug 21, 2022 03:00:23 PM

சென்னையில், மணல் குத்தகை எடுத்து தருவதாக கூறி  5 கோடி ரூபாய் பெற்று திருப்பிச் செலுத்தாத ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய கும்பலை, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலை வைத்து இரண்டு மணி நேரத்தில் கைது செய்த போலீசார், தொழிலதிபரை பத்திரமாக மீட்டனர். 

நிதி மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் சரவணன், மயிலாடுதுறையை சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவரிடம், 5 கோடி ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது.

பலமுறை வாங்கிய தொகையை திருப்பி கேட்டும் சரவணன் அதனை திருப்பித்தராத நிலையில், நேற்று வாங்கிய தொகையை திருப்பி செலுத்த இறுதி கெடு விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நேற்று மாலை, சுமார் 12 பேருடன் தியாகராய நகர் வந்த ஆரோக்கியராஜ், வீடு புகுந்து சரவணனை கடத்திச்சென்றதுடன், வீட்டில் இருந்த தங்க நகைகள், 45 லட்ச ரூபாய் மதிப்பிலான மூன்று வாட்ச்சுக்கள், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 சொகுசு கார்களையும் கடத்தியுள்ளனர்.

இதுகுறித்து சரவணனின் சகோதரர் முத்துக்குமரன், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கடத்தல்காரர்களின் வாகன எண் உள்ளிட்டவற்றை அளித்து தகவல் தெரிவித்துள்ளார்.

கடத்தல் குறித்து சென்னை மற்றும் புறகாவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சரவணகுமாரின் பிஎம்டபிள்யூ கார் செம்மஞ்சேரி அருகே இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து செம்மஞ்சேரி மற்றும் கண்ணகி நகரில் நிறுத்தப்பட்டிருந்த பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ கார்களை மடக்கிப் பிடித்த போலீசார் கடத்தல்காரர்களை கைது செய்தனர்.

அதேநேரம் கிழக்கு கடற்கரை சாலையில், ஆரோக்கியராஜ் பார்ச்சுனர் காரில் சரவணனை கடத்தி செல்வது தெரிய வந்த நிலையில், போலீசார் அவர்களை மடக்கிப்பிடித்து சரவணனை மீட்டு, கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்தனர்.

விசாரணையில், தேனியில் மணல் குத்தகை எடுத்து தருவதாக கூறி ஆரோக்கியராஜிடம் இருந்து சரவணக்குமார் 5 கோடி வரை பெற்றதும், மணல் குத்தகை எடுத்து தராமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. பலமுறை பணத்தை திருப்பி கேட்டு தராததால் ஆரோக்கியராஜ் கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இந்த கடத்தல் புகார் தொடர்பாக ஆரோக்கியராஜ், அரவிந்த், அஃப்ரோஸ் அஜய், விஜயபாண்டி, நாகேந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், நாகேந்திரன் கோயமுத்தூர் சிறைத் துறையில் காவலராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தி.மு.க. நிர்வாகியை தேடிவரும் போலீசார்.!
விஜய்யின் வரவால் தி.மு.க. கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை கே.பாலகிருஷ்ணன்
திருவள்ளூர் சமையல் எரிவாயு சிலிண்டரில் தீ பிடித்ததால் அரசு தொடக்கப்பள்ளி சத்துணவுக் கூடத்தில் திடீர் தீ
சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருட்களை விற்ற 6 பேர் கைது
செல்போன் பேசியவர் மீது காரில் வந்த நபர்கள் சரமாரித் தாக்குதல்
திண்டிவனம் அருகே விரட்டி விரட்டி கடித்த வெறிநாய்... பள்ளி மாணவர்கள் உள்பட நான்கு பேர் அனுமதி
மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர் வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு
கேரளாவுக்குக் கடத்த முயன்ற 2,100 லிட்டர் கெரசின் பறிமுதல்
சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு முளைப்பாரி எடுத்து வந்து கும்மியாட்டம் ஆடி வழிபாடு செய்த பெண்கள்
இருசக்கர வாகனத்தின் இருக்கையில் பதுங்கியிருந்த பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்த பாம்பு பிடி வீரர்

Advertisement
Posted Nov 07, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காவலர் மண்டை உடைப்பு குடிகார புரூஸ்லீக்கு தரமான மாவுக்கட்டு..! கையை தொட்டிலில் போட்டு விட்டனர்..

Posted Nov 06, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

மீண்டும் அதிபராகிறார் டொனால்ட் டிரம்ப்.. கமலாவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கர்கள்..

Posted Nov 06, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாற்றுப் பயிர் சாகுபடிக்கு மகத்தான சாய்ஸ் டிராகன் பழ சாகுபடியில் லாபமீட்டும் விவசாயிகள் மாற்று சாகுபடிக்கு ஏற்ற பயிர்!

Posted Nov 06, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காட்டுக்குள் பதுங்கி பெண்கள் வேட்டை காமுகன் கால் உடைந்தது..! சீரியல் ரேப்பிஸ்ட் சிக்கியது எப்படி ?

Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தேனீக்கள் வளர்ப்பது இவ்வளவு சுலபமா..? மாதம் ரூ.50 ஆயிரம் லாபம்..! ஒரு நாள் பயிற்சி தர்ராங்க..


Advertisement