தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கள்ள ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தற்காலிக பேருந்து நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அந்த வழியாக சென்னை பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததை அடுத்து அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது தெரியவந்தது.
சென்னையை சேர்ந்த நாகராஜன், சங்கரன்கோவிலை சேர்ந்த காஜா நஸ்முதீன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 3 லட்சம் ரூபாய் கள்ள ரூபாய் நோட்டுக்கள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.