டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றதற்காக திரவுபதி முர்முவிற்கு நேரில் வாழ்த்து தெரிவித்ததுடன், மரபு அரிசி வகைகள், அருந்தானியங்கள் அடங்கிய பெட்டகத்தை பரிசாக வழங்கினார்.
முன்னதாக, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரையும் சந்தித்த முதலமைச்சர், அவருக்கு நினைவுப்பரிசை வழங்கினார். பின்னர் பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேகதாது, மின்சாரம் உள்ளிட்ட தமிழகத்திற்கான தேவைகள் குறித்து பிரதமரிடம் முறையிட உள்ளதாக கூறினார்.