விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது போதையில் ரகளை செய்த நபர் மீது ஒரு குடம் தண்ணீரை ஊற்றி போலீசார் தெளியவைத்தனர்.
தமிழக வாழ்வுரிமைக்கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற டாஸ்மாக் கடை ஊழியரான சக்கரவர்த்தி என்பவர், மது போதையில் சட்டையை கிழித்துக்கொண்டு, பேருந்தை மறித்து ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
சாலையில் படுத்த அவரை அங்கிருந்தவர்கள் தர தரவென இழுந்து வந்து சாலையோரம் அமரவைத்தனர். போலீஸ் அதிகாரி ஒருவர் ஒரு குடம் தண்ணீரை போதை ஆசாமி தலையில் ஊற்றி தெளியவைத்தனர்.