திருவண்ணாமலையில் கொதிக்கும் நெய் சட்டியில் கைகளை விட்டு வடை சுட்டு 60 வயது மூதாட்டி ஒருவர் நேர்த்திக்கடன் செலுத்தினார்.
அங்குள்ள செ.அகரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சந்தியம்மன் கோவில் திருவிழாவில் சந்தி அம்மாள் என்ற பெண் பக்தர் இவ்வாறு நேர்த்திக்கடனை செலுத்தினார்.
கரண்டியை பயன்படுத்தாமல் வெறும் கைகளை கொதிக்கும் நெய் சட்டியில் விட்டு அவர் நேர்த்திக்கடன் செலுத்தியதை ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பார்த்தனர்.