ஹெல்த் மிக்ஸ், கோல்ட் காபி, பால் பிஸ்கட் உள்பட 10 வகையான பொருட்கள் ஆவின் மூலம் வரும் 20ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளதாக அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார்.
அதன்படி, பாசந்தி, வெண்ணெய் கட்டி, பாலாடைக்கட்டி, வெண்ணெய் முறுக்கு, வெள்ளை சாக்லேட், பலாப்பழ ஐஸ்கிரீம் போன்றவை விற்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.