கிராமங்களில் கோவில் திருவிழா நடத்துவதற்கு காவல் துறையினரிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், வலையப்பட்டி கிராமத்தில் பட்டு அரசி அம்மன் கோவில் திருவிழா நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருந்தாலோ, ஸ்பீக்கர்கள் மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு மட்டும் காவல்துறையினரிடம் அனுமதி பெற்றால் போதும் என்று கூறினார்.