திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கோவில் திருவிழாவின் போதுகர்ணம் அடித்த கபடி வீரர் திடீரென மயங்கி விழும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆரணி டவுன் களத்து மேட்டுத் தெருவில் கடந்த 8ந்தேதி மாரியம்மன் கோவில் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது.
இதில் களத்துமேட்டு கே.எம்.எஸ். கபடி குழுவினர் கபடி போட்டிக்கான பயிற்சி மேற்கொண்டனர். அப்போது கபடி வீரர் வினோத்குமார் என்பவர் கபடி பயிற்சிக்காக தொடர்ந்து கர்ணம் அடிக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.