தமிழக நிதியமைச்சர் கார் மீதான காலணி வீச்சு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படி கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டின் அமைதிக்கு சிறு குந்தகமும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற கவனத்துடன் ஆட்சியும், தி.மு.க.வும் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சமூக விரோதிகளைக் கொண்ட அரசியல் வீணர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பவிட மாட்டோம் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.