செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ரூ.20 கோடி நகை கொள்ளை தனிப்படை போலீசார் விசாரணை.. தப்பிச் சென்ற முருகன் எங்கே?

Aug 14, 2022 06:50:15 PM

சென்னை பெடரல் வங்கியின் ஃபெட்பேங்க் ஃபாஸ்ட் கோல்டு லோன் கிளையில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான 32 கிலோ தங்க நகைகளை கொள்ளையடிக்க உதவியதாக முருகனின் நண்பர் பாலாஜியை கைது செய்த போலீசார், கொள்ளையர்கள் குறித்து தகவல் அளிப்போருக்கு ஒரு லட்ச ரூபாய் சன்மானம் அறிவித்துள்ளனர்.

சென்னை அரும்பாக்கத்தில் பெடரல் வங்கியின் ஃபெட்பேங்க் ஃபாஸ்ட் கோல்டு லோன் கிளையில் நேற்று மாலை வங்கி ஊழியர்களைக் கட்டிப் போட்டு 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 32 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

இதுதொடர்பாக வங்கியின் காவலாளி சரவணன், பெண் ஊழியர் ராஜலட்சுமி, மற்றொரு ஊழியர் என மூவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அதே வங்கியில் வாடிக்கையாளர் சேவை மைய மேலாளராக பணிபுரிந்து வந்த, பாடி படவட்டம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் கூட்டாளிகளுடன் வந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

முருகனின் கூட்டாளிகள் வங்கி ஊழியர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கட்டிபோட்டு லாக்கர் சாவிகளை கைப்பற்றியுள்ளனர். லாக்கரில் இருந்த ஒட்டுமொத்த நகைகளையும் எடுத்துக்கொண்டு மூவரும் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றுள்ளனர்.

சிசிடிவி காட்சிகள் மற்றும் இருசக்கர வாகனத்தின் விவரங்களை கொண்டு, முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளான மகேஷ், ஷரத் ஆகியோரைப் பிடிக்க நான்கு தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. மேலும், முருகனுக்கு நெருக்கமான மற்றும் தொடர்புடைய ஊழியர்களிடம், அரும்பாக்கம் காவல்நிலையத்தில் வைத்து நள்ளிரவு கடந்தும் போலீசார் விசாரணை நடத்தினர்.

நகை கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார், கொள்ளைக்கு வெளியில் இருந்து உதவிய முருகனின் நண்பன் பாலாஜியை கைது செய்து தீவிர விசாரண நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கொள்ளையர்களின் புகைப்படம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் அடையாளத்தை வெளியிட்டுள்ள போலீசார், கொள்ளையர்கள் குறித்து தகவல் அளிப்போருக்கு ஒரு லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

மேலும், தகவல் அளிக்க ஏதுவாக பொதுமக்கள் தொடர்புகொள்ளும் வகையில் காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை எண்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில், காவல்துறை டிஜிபி அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் மற்றும் சென்னை நகர் கட்டுப்பாட்டு அறை எண் என இரு எண்களை போலீசார் அறிவித்துள்ளனர்.

இதனிடையே, அரும்பாக்கம் ஃபெட்பேங்க் கோல்டு லோன் வங்கியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளுடன் கொள்ளையர்கள் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

வங்கியில் இருந்த நகைகள் அனைத்தும் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த வங்கி நிர்வாகம், வழக்கு முடிந்த பிறகு நகைகள் உரிய வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும், நகைகள் கிடைக்காத பட்சத்தில் காப்பீட்டு பணம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் விளக்கமளித்துள்ளது.


Advertisement
தேசிய நெடுஞ்சாலையை செப்பனிடக்கோரி கடையடைப்பு - தொழில் வர்த்தக சங்கத்தினர் போராட்டம்..
வேலைக்கு வந்தவரை அடைத்து வைத்து கொடுமை.. கேள்வி கேட்டால் அடி, உதை.. தப்பிக்க நினைத்தால் திருட்டுப் பட்டம்!
காற்றத்தழுத்தத் தாழ்வு மண்டலம் - கரையோரங்களில் நிறுத்தி வைத்துள்ள படகுகள்..
திருவாரூரில் தொடரும் மழையால் விளைநிலங்கள் பாதிப்பு..
அடியோடு சாய்ந்த மரம் கூடவே விழுந்த மின்கம்பம்... பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
கடல் சீற்றத்தால் படகுகள் கரையிலேயே நிறுத்தி வைப்பு
நாகப்பட்டினத்தில் நேற்று அதிகாலை தொடங்கிய மழை
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் பா.ம.க.வினர் 29 பேர் மீது வழக்குப்பதிவு
சங்கராபுரம் அருகே, சாலையிலேயே அடித்துக் கொண்ட அரசுப்பள்ளி மாணவர்கள்
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - புதுச்சேரி ஆட்சியர் ஆலோசனை

Advertisement
Posted Nov 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வேலைக்கு வந்தவரை அடைத்து வைத்து கொடுமை.. கேள்வி கேட்டால் அடி, உதை.. தப்பிக்க நினைத்தால் திருட்டுப் பட்டம்!

Posted Nov 26, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“எங்க வந்து யாருகிட்ட..” அட்ராசிட்டி பாயை ஓட விட்ட நகராட்சி ஊழியர்..! கடைக்கும் பூட்டு போட்டனர்

Posted Nov 25, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

விடிய விடிய 6 பீர் குடித்தாரம்.. பலியான 27 வயது பெண்..! லாட்ஜில் நடந்தது என்ன? 60 வயது நண்பரிடம் விசாரணை

Posted Nov 25, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

கார் - 80 சவரன் நகைக்காக 10 வருட காதலுக்கு பை பை..! ஜிம் மாஸ்டருக்கு லாக் அப்..!

Posted Nov 24, 2024 in இந்தியா,அரசியல்,Big Stories,

மராத்தா பெருமையை கையில் எடுத்த பா.ஜ.க.. திருப்புமுனை தந்த அன்பு சகோதரிகள் திட்டம்.. ஆட்சியை தக்க வைத்த மகாயுதி கூட்டணி


Advertisement