மதுரை விமானநிலையத்தில் நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாராஜனின் கார் மீது காலனியை வீசியது தொடர்பாக பாஜகவை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 4 பேர் திருச்சியையும், 2 பேர் மதுரையையும் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
பி டி ஆரின் கார் மீது வீசப்பட்ட காலணியை அணிந்திருந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் அந்தப் பெண்ணும் கைது செய்யப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.