கடலின் உப்புநீரை எரிபொருளாக கொண்டு எரியும் இந்தியாவின் முதல் உப்பு நீர் எல்.இ.டி. விளக்கு சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
கடல்சார் ஆராய்ச்சிக்காக தேசிய பெருங்கடல் தொழில்நுட்பக் கழகத்தால் இயக்கப்படும் சாகர் அன்வேஷிகா என்ற கடல்சார் ஆராய்ச்சி கப்பலை சென்னை துறைமுகத்தில் இன்று நேரில் பார்வையிட்ட மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங், ரோஷினி என்று பெயரிடப்பட்ட இந்த எல்.இ.டி.விளக்கை அறிமுகப்படுத்தினார்.
பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மின்முனைகளுக்கு இடையே கடல் நீரை எலக்ட்ரோலைட்டாக பயன்படுத்தி இந்த எல்.இ.டி.விளக்கு எரிகிறது. கடல் பகுதி இல்லாத இடங்களில் சாதாரண உப்பு கரைசல் நீரிலும் எரியும் வகையில் இந்த எல்.இ.டி. விளக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.