கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ஒரு வார காலமாக ஆற்றின் நடுவே உள்ள மணல் திட்டில் தஞ்சம் அடைந்த பசு மாடுகளை உயிரை பணயம் வைத்து விவசாயிகள் படகில் சென்று பார்த்து உணவு அளித்தனர்.
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் நளன்புத்தூர் மற்றும் ஓட்றபாளையம் கிராமத்தை சேர்ந்த மேய்ச்சலுக்கு சென்ற 30 க்கும் மேற்பட்ட பசு மாடுகள் வீடுகளுக்கு திரும்பவில்லை.
இதனால் கவலைப்பட்ட விவசாயிகள் மாடுகளின் நிலை குறித்து அறிய எஞ்சின் படகு மூலம் ஆற்று வெள்ளத்தில் புறப்பட்டு சென்று ஆற்றின் நடுவே இருந்த மணற்பாங்கான திட்டில் ஒருவாரணமாக உண்ணாமல் கிடந்த மாடுகளுக்கு வைக்கோல் மற்றும் புல் கட்டுகளை வழங்கினர்.