ஆவின் பாலை கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பேக்கில் விற்க முடியுமா? என தமிழக அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி தொடர்ந்த வழக்கின் விசாரணையில், தீங்கு என தெரிந்தும், பிளாஸ்டிக்கில் அடைக்கப்படும் உணவுப்பொருட்களை நாம் உண்ணுவதாகவும், அவற்றில் பால் விற்பதை ஏன் தடை செய்யக்கூடாது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, உடலுக்கு தீங்கு என்றால் தடை செய்ய தயாராக இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.வழக்கு விசாரணைக்கு வரும்போதுதான் சோதனை நடத்தப்படுவதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தண்ணீர் கேன்களின் சுகாதாரம் குறித்து உணவு பாதுகாப்பு துறை விளக்கமளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.