குடும்ப தகராறால் ஏற்பட்ட மோதலில், முகத்திலும், கையிலும் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்தம் சொட்ட, சொட்ட ஒரு தம்பதி சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.
திருவொற்றியூர் ராஜா கடை பகுதியை சேர்ந்த தங்கராஜ் மற்றும் அவரது மனைவி அனிதா ஆகிய இருவரையும், அனிதாவின் அண்ணன் அருண்குமார் கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடி விட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ஸ்டான்லி மருத்துவமனையில் தங்களுக்கு சிகிச்சை அளிக்கவில்லை என்றும் அந்த தம்பதியினர் கண்ணீருடன் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்து, அவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.