சென்னையில், கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர்களை குறிவைத்து ஸ்டாம்ப் வடிவிலான புதிய ரக போதை பொருளை விற்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அண்ணாசாலை, திருவல்லிக்கேணி பகுதிகளில் 'லைசெர்ஜிக் டை எத்திலமைடு' என்ற வேதிப்பொருளால் ஆன ஸ்டாம்ப் வடிவிலான போதை பொருளை சிலர் விற்பதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்திய போலீசார் பார்டர் தோட்டம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்ற இருவரை சோதனையிட்டபோது அவர்களிடம் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான 200 போதை ஸ்டாம்ப்-கள் சிக்கின. முகமது ரியாஸ், முகமது ஈசா ஆகிய அந்த இருவரும் ஒவ்வொரு போதை ஸ்டாம்பையும் 2,000 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரை விற்றுள்ளது விசாரணையில் தெரியவந்தது.