கேரளாவில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகைக்கு சென்ற பெண் போலீஸ் மீது வாகனம் மோதும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
கொளவல்லூர் காவல் நிலையத்தில் இருந்து ஜின்சி என்ற பெண் போலீஸ் ஒருவர் சக காவலருடன் சுதந்திர தின ஒத்திகைக்காக புறப்பட்டார். பேருந்தில் ஏறுவதற்காக சாலையின் குறுக்கே சென்ற போது அவ்வழியாக அதிவேகமாக சென்ற இரு சக்கர வாகனம் ஜின்சி மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் அந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.