கோயம்புத்தூர் மாவட்டம் விளாங்குறிச்சியில் ஐ.ஒ.சி குழாய் வெடித்ததாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவிவந்த நிலையில், அங்கு நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் குழாய் பதிக்கும் இடத்தில் தேங்கியிருந்த சேற்று நீர் வெளியேறியதாகக் கூறியுள்ளார்.
தண்ணீர் பந்தல் சாலையில் பதிக்கப்பட்டுள்ள எரிவாயு குழாய் வழியாக எரிவாயு செலுத்தி சோதனை நடைபெற்றபோது பல அடி உயரத்திற்கு சேற்று நீர் பீய்ச்சி அடித்தது.
அப்பகுதியை ஐ.ஒ.சி அதிகாரிகளுடன் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் சமீரன், அங்கு அதிகப்படியாகத் தேங்கியிருந்த சேற்றுநீர் மட்டுமே வெளியேறியதாகவும், அதனால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.