சேலம் தாதகாப்பட்டியில், பணம் கேட்டு டீ மாஸ்டரை தாக்கிய வழக்கில் 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் கைதான நிலையில், தலைமறைவாக இருந்த ரவுடியையும் போலீசார் கைது செய்தனர்.
வில்லு கடை பேருந்து நிலையத்தில் உள்ள தேநீர் கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வரும் அப்துல் சுப்புவிடம், 5 பேர் கொண்ட கும்பல் சிகரெட் கேட்டுள்ளனர்.
சிகரெட் இல்லை என அவர் கூறியதையடுத்து, டீ மாஸ்டர் முகத்தில் புகையை ஊதிய ரவுடி, பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து டீ மாஸ்டரை கண்ணாடி ஜாடியை கொண்டு தாக்கிய கும்பல், கடையை சூறையாடியது.