தமிழகத்தில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும், தனியாக சைபர் செல் பிரிவும், நுண்ணறிவு பிரிவும் உருவாக்கப்பட உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 'போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' எனும் திட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர், அது குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்டார்.
பின்னர், பள்ளி மாணவர்களுடன் இணைந்து முதலமைச்சர் உறுதிமொழி ஏற்றார். மாநிலம் முழுவதும் ஒரே சமயத்தில் 30 லட்சம் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றது ஆசிய சாதனையாக பதிவானது. நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், போதை ஒழிப்பு நடவடிக்கையில் சர்வாதிகாரி போல செயல்படுவேன் என்றார்.