நாட்டின் 14ஆவது குடியரசுத் துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்றுக்கொண்டார். அவருக்குக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் 528 வாக்குகளைப் பெற்ற ஜெகதீப் தன்கர் வெற்றிபெற்றார். அதற்கான சான்றிதழைத் தலைமைத் தேர்தல் ஆணையர் கையொப்பமிட்டு வழங்கினார். இன்று பதவியேற்பு விழாவையொட்டி டெல்லி ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜெகதீப் தன்கர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நண்பகலில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர்கள் வெங்கைய நாயுடு, அமீது அன்சாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவுக்கு வந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முக்கு இசை முழக்கத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாட்டின் 14ஆவது குடியரசுத் துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்றுக்கொண்டார். அவருக்குக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார். பதவியேற்பு உறுதிமொழிக்குப் பின் ஜெகதீப் தன்கர் பதிவேட்டில் கையொப்பமிட்டார்.