தமிழகத்தில் ஆன்மீக ஆட்சியை கொண்டு வருவது தான் பாஜகவின் நோக்கம் என்று தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், தேசுமுகிப்பேட்டையில் சிவனடியார் சிவதாமோதரனை, அண்ணாமலை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அண்ணாமலை, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதே ஆன்மீக ஆட்சி என்றும் தெரிவித்தார்.