திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலையில் இருந்து அதிகப்படியான நச்சுக் கழிவுகள் வெளியேறுவதை கண்டித்து பாதிக்கப்பட்ட மக்கள் நுழைவாயில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை அருகே இயங்கி வரும் காமாட்சி ஸ்டில்ஸ் அண்ட் பவர் என்ற தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் அதிகப்படியான நச்சு கழிவுகளால் காற்று மற்றும் நிலத்தடி நீர் நச்சடைந்து காசநோய், புற்றுநோய் மற்றும் நுரையீரல் கோளாறு உள்ளிட்ட கொடிய வியாதிகள் பரவுவதாகவும் குற்றஞ்சாட்டினர்.