முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், அணையில் இருந்து விதிகளின் படி தண்ணீர் திறக்கப்படுவதாகவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணைக்கு அருகே வசிக்கும் கேரள மக்களின் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும் என்றும் தமிழக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அணையின் நீர் மட்டம் பாதுகா ப்பாக இருப்பதை உறுதி செய்ய கேரள முதலமைச்சர் எழுதிய கடிதத்திற்கு தமிழக முதலமைச்சர் பதில் கடிதம் எழுதியுள்ளார்.