திருவள்ளூர் அருகே நள்ளிரவில் மூதாட்டியின் வீட்டில் திருட வந்த வட மாநில கொள்ளையன், கிராம மக்கள் அடித்து உதைத்ததில் உயிரிழந்தான்.
கெட்டனமல்லி கிராமத்தில் 80 வயதான மூதாட்டி தனது இரு மகள்களுடன் வசித்து வருகிறார். நள்ளிரவு மூதாட்டியின் வீட்டுக்கு வந்த 3 வட மாநிலத்தவர்கள், வெளியே படுத்திருந்த மூதாட்டியின் தலையில் தாக்கிவிட்டு உள் தாழ்பாளை உடைக்க முயன்றதாக கூறப்படுகிறது. மூதாட்டி கத்திக் கூச்சலிட்டதால், அக்கம் பக்கத்தினர் ஒன்று திரண்டு மூவரையும் பிடிக்க முயன்றுள்ளனர்.
அதில் இருவர் தப்பியோடிய நிலையில், வீட்டிற்கு அருகிலுள்ள பள்ளத்தில் ஒளிந்திருந்த கொள்ளையனை பிடித்த கிராம மக்கள், ஆத்திரத்தில் அடித்து உதைத்ததில் அந்த நபர் உயிரிழந்தார்.