சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர் மாயமான சம்பவத்தில், உடன் வேலை பார்ப்பவருடன் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு வந்திறங்கிய மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவனே கொலை செய்து மறைத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
திருவொற்றியூர் பூங்காவனம் பகுதியை சேர்ந்த மணிமாறன், தனியார் நிறுவனத்தில் ஹவுஸ் ஹீப்பிங் வேலை செய்து வருகின்றார். இவரது மனைவி மைதிலி சென்னை மா நகராட்சியின் ஒப்பந்த தூய்மை பணியாளராக திருவொற்றியூர் 1வது மண்டலத்தில் பணிபுரிந்து வந்தார்.
கடந்த 3 ந்தேதி வேலைக்கு சென்ற தனது மனைவி மைதிலியை காணவில்லை என்று கணவர் மணிமாறன்திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் தேடிவந்த நிலையில் திருவொற்றியூரில் இருந்து மணலி செல்வதற்காக புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்திற்கு அடியில் துணிக்குவியலுக்குள் ஒரு பெண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. அதனை கைப்பற்றி பிணகூறாய்வுக்கு அனுப்பி வைத்த போலீசார் அது மாயமான மைதிலியின் சடலம் என்பதை கண்டு பிடித்தனர்.
அந்தப்பெண் கடைசியாக அவருடன் வேலைபார்க்கும் ஜெய்சங்கர் என்பவருடன் பைக்கில் ஒன்றாக சென்றது தெரியவந்தது. அவரிடம் விசாரித்த போது தன்னிடம் லிப்ட் கேட்டு பைக்கில் வந்த மைதிலியை எண்ணூர் விரைவுச்சாலையில் வைத்து மணிபாறன் பார்த்து மறித்து சண்டையிட்டதாகவும், பின்னர் அவரது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச்சென்றதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து மணிமாறனை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய போது , ஜெய்சங்கருடன் ஒரே வாகனத்தில் உரசிக்கொண்டு வந்த மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு சண்டையிட்டு அழைத்துச்சென்றதாக ஒப்புக் கொண்டார்.
சம்பவத்தன்று ஆள் அரவமின்றி காணப்பட்ட மணலி புதிய பாலத்தின் அடிப்பகுதியில் பைக்கை நிறுத்திவிட்டு , அங்கிருந்த துணிக்குவியல் மீது அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்த போது அங்கு கிடந்த துணியால் மைதியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் , சடலத்தை துணிக்குவியலுக்குள் மறைத்து வைத்து விட்டு, மனைவி கொலை வழக்கில் ஜெய்சங்கரை போலீசில் சிக்க வைக்கும் நோக்கத்தில் மனைவி மாயமானதாக போலீசில் புகார் அளித்ததாக மணிமாறன் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து மணிமாறனை கொலை வழக்கில் கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் .
((spl gfx out)) மணவாழ்வில் உண்டாகும் சந்தேகம், தீராத நோய், இருவருக்கும் மனமிருந்தால் சேர்ந்து வாழலாம், இல்லையெனில் பரஸ்பரம் பிரிந்து சென்று விட வேண்டும் அதை விடுத்து கொலை செய்வதால் இருவரது வாழக்கையுமே அழிந்து போய்விடும் என்று சுட்டிக்காட்டுகின்றனர் காவல்துறையினர்.