விவசாயிகள் மீது அக்கறையில்லாமல் அரசு செயல்படுவதாகவும், கடலில் கலக்கும் நீரை, உரிய முறையில் சேமிக்காமல் மெத்தன போக்குடன் நடந்து கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சேலம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் திட்டப் பணிகளை தொடங்கி வைத்த அவர், வெள்ளாளபுரம் செங்காடு பகுதியில் நீர் உந்து நிலையம் அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.
பின்னர் பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, சொத்துவரி, மின்சாரக் கட்டணத்தைத் தொடர்ந்து பேருந்து கட்டணமும் விரைவில் உயரப் போவதாக கூறினார்.