காந்தியடிகளும் ஜீவாவும் சந்தித்த சிவகங்கை மாவட்டம் சிராவயலில் மணிமண்டபம் அமைக்கப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருப்பூரில் நடைபெற்ற அம்மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்ற அவர், நாணயத்திற்கு இரு பக்கம் போல, மாநிலத்திற்கு வளர்ச்சி திட்டமும், சமுக மேம்பாடும் அவசியம் என தெரிவித்தார்.
மேலும், 75வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாட்டமாக மட்டுமல்லாது, அன்று நாட்டை செம்மைபடுத்திட உறுதியேற்க வேண்டும் என்றும் கூறினார்.