கேரளாவில் குரங்கம்மை நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அம்மாநிலத்தை ஒட்டிய 13 எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, மக்களுக்கு கைகள் மற்றும் முழங்காலுக்கு கீழே வீக்கம் ஏற்பட்டுள்ளதா என பரிசோதிக்கப்பட்டு வருவதாக மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
செப்டம்பர் மாதத்திற்குள் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலி பணியிடங்களில் செவிலியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும், கூறினார்.