தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வாங்க ஏழு நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அரசு அனுமதிக்காததால், ஆலையை விற்கப்போவதாக வேதாந்தா நிறுவனம் கடந்த ஜூன் மாதம் அறிவித்தது.
ஆலையை வாங்க விரும்புவோர் ஜூலை 4ஆம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவித்திருந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை வாங்க முன்வந்துள்ள நிறுவனங்களின் தகவல்களை அனில் அகர்வால் கூறியுள்ளார்.