மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் 2 லட்சம் கன அடிக்கு மேல் உபரி நீர் செல்வதால், ஆற்றுப்படுகையின் நடுவில் உள்ள நாதல்படுகை உள்பட மூன்று திட்டு கிராமங்களுக்கான சாலை வசதி துண்டிக்கப்பட்டு மக்கள் படகுகள் மூலம் வெளியேறி வருகின்றனர்.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேற வருவாய்த்துறையினர் அறிவுறுத்திய நிலையில், வடிகால்களில் உள்ள கதவணைகள் பழுதடைந்ததால் மறுகரையில் உள்ள கிராமங்களிலும் தண்ணீர் புகுந்தது.