திருவண்ணாமலை மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றில் தனது 3 குழந்தைகளை வீசி எறிந்து கொன்று விட்டு, தற்கொலைக்கு முன்ற தாய், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சதாகுப்பத்தைச் சேர்ந்த அமுதா என்பவருக்கு ஐந்து மற்றும் மூன்று வயதில் இரு மகன்களும், 7 மாத பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவருடன் அமுதாவிற்கு கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பள்ளி சென்ற தனது மகனை அழைந்து வந்து, வீட்டில் இருந்த இரு குழந்தைளுடன் தென்பெண்ணை ஆற்றிற்கு சென்ற அமுதா, அவர்கள் மூவரையும் ஆற்றில் வீசியுள்ளர். பின்னர், தற்கொலைக்கு முயன்ற அமுதாவை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.