வங்கக்கடலில் ஆகஸ்டு 7ஆம் நாள் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
வடமேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலச் சுழற்சியின் காரணமாகக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதனால் தென்மேற்குப் பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. வளிமண்டலச் சுழற்சி காரணமாகத் தமிழ்நாட்டில் இன்று கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக் கூடும் என்றும், நாளை கனமழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.