ஜெர்மனியில் வேலை வாங்கித் தருவதாக கூறி மயிலாடுதுறையைச் சேர்ந்த இசைக் கலைஞர்களிடம் 54 லட்சம் ரூபாய் வரை பெற்று மோசடியில் ஈடுபட்டு வெளிநாடு தப்பிச்செல்ல இருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
திருவிழந்தூர் பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த பூரணச்சந்திரன், தன்னுடன் தொழில்முறை பழக்கத்தில் உள்ள திருப்புங்கூரைச் சேர்ந்த நாதஸ்வரம் மற்றும் தவில் வித்வான் கலைஞர்களான செந்தில்குமரன் உட்பட 26 பேரிடம் ஜெர்மனியில் வேலை இருப்பதாக கூறி 2 முதல் 3 லட்சம் ரூபாய் வரை பெற்று, அங்கு பணிபுரிவதற்கான போலி விசாவை வழங்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், சென்னை பூந்தமல்லி தனியார் விடுதியில் தங்கியிருந்த அவரை கைது செய்து 12 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.